தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டல்கள், மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.
தூத்துக்குடி,
மத்திய அரசு புதிதாக அறிவித்து உள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில், ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்துக்கு குறைவாக உள்ள சிறிய உணவகங்களுக்கான வரி 0.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு 2 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பலமடங்கு வரி உயர்வை கண்டித்து ஓட்டல் உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் ஓட்டல்களை அடைத்து போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 120 ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் வழக்கம் போல் நேற்று திறந்து இருந்தன. இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மருந்து வணிகர்கள்
இதேபோன்று அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்து கொள்முதல், விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய புதிய சேவை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனை கண்டித்து மருந்து வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 400 மருந்துகடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் மருந்து பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இதேபோல், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள 155 மருந்து கடைகளும் மூடப்பட்டன. கோவில்பட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களும் திறக்கப்படவில்லை.
கயத்தாறில் அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. நாற்கர சாலையில் உள்ள பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டன. டீக்கடைகள், சிறிய ஓட்டல்கள் திறந்து இருந்தன. கழுகுமலை, எட்டயபுரத்தில் அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. விளாத்திகுளத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் மூடப்பட்டன.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் அனைத்து ஓட்டல்களும் திறந்து இருந்தன. பெரும்பாலான மருந்து கடைகள் மூடப்பட்டன. காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர், செய்துங்கநல்லூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்து இருந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக