ஞாயிறு, 7 மே, 2017

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் திடீர் மழை

வைகுண்டம்: வைகுண்டம் பகுதியில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள சூழலில் வெயில் அனலாய் அடித்து வருவதால் பொதுமக்கள் பகலில் வெளியில் நடமாட தயங்கி வருகின்றனர். இந்நிலையில், வைகுண்டம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, புதுக்குடி, ஆழ்வார்திருநகரி ஆதிநாதபுரம், நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், பால்குளம், திருக்களூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மதியம் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. வைகுண்டத்தில் மழை பெய்தபோது ஒரு வீட்டின் மீது இடி விழுந்தது. ஆனால் இதில் வீடு மட்டும் லேசாக சேதம் அடைந்தது. வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. சுமார் ஒருமணிநேரம் வெளுத்துக்கட்டிய இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.  வைகுண்டம், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் பலலட்சம் மதிப்பிலான வாழைகள் தண்ணீரின்றி கருகி வந்த நிலையில் திடீரென்று கொட்டித்தீர்த்த கோடை மழையால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...