சனி, 6 மே, 2017

காயல்பட்டினத்தில் உறைகிணற்றை தூர்வாரிய போது பரிதாபம் வி‌ஷவாயு தாக்கி மாணவர் உள்பட 2 பேர் பலி

காயல்பட்டினத்தில் உறைகிணற்றை தூர்வாரிய போது பரிதாபம் வி‌ஷவாயு தாக்கி மாணவர் உள்பட 2 பேர் பலி மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை

காயல்பட்டினத்தில் உறைகிணற்றை தூர்வாரிய போது பரிதாபம் வி‌ஷவாயு தாக்கி மாணவர் உள்பட 2 பேர் பலி மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை
காயல்பட்டினத்தில் உறை கிணற்றை தூர்வாரிய போது வி‌ஷவாயு தாக்கி பிளஸ்–1 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஆறுமுகநேரி, 

காயல்பட்டினத்தில் உறை கிணற்றை தூர்வாரிய போது வி‌ஷவாயு தாக்கி பிளஸ்–1 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறைகிணற்றை தூர்வாரும் பணி 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கீழ லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பத்திரகாளி. இவரது வீட்டின் வளாகத்தில் சுமார் 15 அடி ஆழமும், 2½ அடி விட்டமும் கொண்ட உறைகிணறு உள்ளது.

அதில் 2 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. தற்போது கடும் வறட்சி நிலவுவதால், தனது வீட்டில் உள்ள உறைகிணற்றை தூர்வார பத்திரகாளி திட்டமிட்டார்.

இதற்கான பணியில் நேற்று காலையில் அந்த பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான செபஸ்தியான் (வயது 50), ஆத்திமுத்து மகன் சண்முகசுந்தரம் (17) ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இதில் சண்முகசுந்தரம் பிளஸ்–1 மாணவர் ஆவார். தற்போது கோடை விடுமுறை என்பதால், அவர் உறைகிணற்றை தூர்வாரும் பணிக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வி‌ஷவாயு தாக்கியது 

செபஸ்தியான் உறைகிணற்றுக்குள் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். சண்முகசுந்தரம் உறைகிணற்றின் மேலே நின்றிருந்தார். அப்போது உறைகிணற்றில் இருந்து வி‌ஷவாயு வெளியேறியது. இதனால் செபஸ்தியான் கூச்சலிட்டவாறு மயங்கி விழுந்தார். உடனே அவரை காப்பாற்றுவதற்காக சண்முகசுந்தரமும் உறைகிணற்றுக்குள் இறங்கினார். இதனால் அவரும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து, உறைகிணற்றுக்குள் மயங்கி கிடந்த செபஸ்தியான், சண்முகசுந்தரம் ஆகிய 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (47), அவருடைய மகன் முத்துக்குமார் (22) ஆகிய 2 பேரும் உறைகிணற்றுக்கு மேலே நின்று கொண்டு மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களும் வி‌ஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி மயங்கி விழுந்தனர்.

2 பேர் பலி 


பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் முகத்தில் துணியை கட்டியவாறு, உறைகிணற்றுக்குள் இறங்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செபஸ்தியான், சண்முகசுந்தரம் மற்றும் உறைகிணற்றுக்கு வெளியே மயங்கி கிடந்த மாரியப்பன், முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே செபஸ்தியான், சண்முகசுந்தரம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாரியப்பன், முத்துக்குமார் ஆகிய 2 பேருக்கும் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண் எரிச்சல் 

2 பேர் சாவுக்கு காரணமான உறைகிணற்றில் இருந்து தொடர்ந்து பயங்கர நெடியுடன் வி‌ஷவாயு வெளியேறியவாறு இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நீண்ட நேரமாக கண் எரிச்சல், இருமல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. எனவே அந்த உறை கிணற்றை இரும்பு தகரத்தை வைத்து மூடி வைத்தனர்.

வி‌ஷவாயு தாக்கி உயிரிழந்த செபஸ்தியானுக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...