புதன், 10 மே, 2017

ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராமங் களான விலை இருந்தும் பயனில்லை வீழ்ந்துவரும் வெற்றிலை விவசாயம்

விலை இருந்தும் பயனில்லை வீழ்ந்துவரும் வெற்றிலை விவசாயம்
ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராமங் களான திருவழுதிநாடார் விளை, வாழவல்லான், லெட்சுமிபுரம், உமரிக் காடு, முக்காணி, ஆத்தூர், மேல ஆத்தூர், சேதுக்கு வாய்த்தான், சொக்கப் பழங்கரை, மரந்தலை, வெள் ளக்கோயில், சுகந்தலை உள்பட பகுதிகளில் வெற்றி லை பயிர் செய்யப்படு கிறது.
ஐப்பசி மாதம் வெற்றி லை கொடிக்கால் தொழி லை விவசாயிகள் தொடங் குகிறார்கள். முதலில் இங் குள்ள வயல்களை 3 வருடங் களுக்கு என கட்டுக்குத் தகைக்கு எடுத்து கான் களை தோண்டி முதலில் அகத்தி மற்றும் முருங் கை விதைகளை ஊன்று கின்றனர்.
கான்களில் தேங்கி யுள்ள தண்ணீரை ஒருநாள் விட்டு ஒருநாள் இறைத்து விதைகள் மீது படுமாறு ஊற்றுகின்றனர். முருங்கை மற்றும் அகத்தி மரம் தளிர்விட்டதும் 60 நாளில் வெற்றிலை கொடியினை இதற்கிடையில் நட்டு அதனை அகத்தி மற்றும் முருங்கை மரத்தில் படரவிடுகின்றனர். 5 மாதம் கழித்து வெற்றிலை பறிக்கத் தொடங்குகின்றனர். ஒரு வெற்றிலை கொடிக்கால் இரண்டரை ஆண்டுகள் வரை பலன் தரும்.
வெற்றிலை சக்கை, மாத்து, பொடி வெற்றிலை என மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. சக்கையும், மாத்து வெற்றி லையும் டெல்லி, ராஜஸ் தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங் களுக்கு அனுப்பப்படுகின் றன. பொடி வெற்றிலை தூத்துக்குடி, திருநெல்வேலி உட்பட மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
வெற்றிலை படரவிடு வதற்காக நடும் முருங் கை யில் இருந்துகாயும், அகத்தி யில் இருந்து கீரையும் கிடைப்பதால் இத்தொ ழில் வெற்றிகரமான விவசாய மாக இப்பகுதியில் நடந்து வந்தது.
வெற்றிலை விலையை இப்பகுதியில் வெற்றிலை விவசாயத்தின் தலைமை யிடமாக செயல்பட்டு வரும் ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம் தான் நிர்ணயிக்கிறது. தற்போது சக்கை வெற்றிலை ஒரு கிலோ ரூ.160க்கும், மாத்து ரூ.128க்கும், பயிர் சாதா வெற்றிலை ரூ.114க்கும், முதுகால் வெற்றிலை ரூ.114க் கும் விற்பனை ஆகிறது.
வெற்றிலை விலை இருந் தும் பறிப்பதற்கு கொடிக்கா லில் வெற்றிலை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் வெற்றிலை பறிப்பு மிக, மிக குறைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இப்பகுதியில் நடந்த விவ சாயம் தற்பொழுது கால் வாசியாக குறைந்து விட்டது.
ஆண்டு தோறும் மழைக் காலத்தில் கொடிக்காலில் தேங்கும் மழை தண்ணீ ரை வடியவைக்க வழி யில்லாமல் அழிந்து வந்த வெற்றிலை விவசா யம்தற்பொழுது பருவ மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் அழிந்து வருகிறது. மழை இல்லாததால் போர் அமைத்து டீசல் இஞ் சின் மூலம் தண்ணீர் பாய்ச் சுவதற்கு வழியில்லாத பெரும்பாலான விவசாயி கள் வெற்றிலை பயிர் செய்வதை நிறுத்திவிட்டு மாற்று தொழிலும் செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதனால் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர் களும் வேலை இழந்து வருகின்றனர் தற்பொழுது வெற்றிலை கொடிக்கால் கள் போட்டுள்ள விவசாயி கள் வெற்றிலை பயிர் களை காப்பாற்றிட நிலத் தடி தண்ணீர் கிடைக்காத தால் பல கீ.மீட்டர் தூரத் தில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வெற்றிலையை காப்பாற்ற போராடி வருகின்றனர். இதனால் உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஏரல் பகுதியில் முக்கிய விவசாயமாக விளங்கி வந்த வெற்றிலை வரும் காலத்தில் இப்பகுதியில் காட்சி பொருளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு இப்பகுதி யில் அழிந்து வரும் வெற்றி லை விவசாயத்தை காப் பாற்ற விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தும், கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோருகின்றனர்.

நன்றி நெல்லை முரசு - ஏரல் நகர் மலர் - தேதி 10 -05-2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...