ஞாயிறு, 21 மே, 2017

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பீர்கனி(வயது 65).ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது

ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது

ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பீர்கனி(வயது 65). இவர் சங்குகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை தூத்துக்குடி கடற்கரை சாலையில் நடை பயிற்சிக்கு சென்றார்.

7.30 மணி அளவில் அவர் கடற்கரை சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே வந்து கொண்டிருந்த பீர்கனியை 3 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது. அங்கு இருந்தவர்கள் பீர்கனியை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

காலை 8 மணிக்கு பீர்கனியின் மகன் மைதீன்(33) செல்போன் எண்ணிற்கு ஒரு போன் வந்துள்ளது.

இதில் பேசிய மர்ம நபர், நாங்கள் உனது தந்தையை கடத்தி உள்ளோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிரோடு விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைதீன் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மைதீன் செல்போனிற்கு வந்த எண்ணை கண்காணித்தபோது, அது முதலில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இருப்பதாகவும், பின்னர் நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் இருப்பதாகவும் சிக்னல் காட்டியது. கடைசியாக சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியில் அந்த சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனால் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மீட்பு; 2 பேர் கைது

இதையடுத்து மதியம் 1.25 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை பகுதி சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு காரை அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் பீர்கனி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக செயல்பட்டு காரில் இருந்து பீர்கனியை மீட்டனர். தொடர்ந்து அவரை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த செழியன் மகன் மதன்(30) என்பதும், மதுரை பாவை நகரை சேர்ந்த முருகன் மகன் வீரசுப்பு (32) என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவர்களை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...