தூத்துக்குடி மே 5 ;தூத்துக்குடியில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும்; அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் குடும்ப அட்டைகளை மாற்றி மின்னணு குடும்ப அட்டைகளாக அச்சிட்டு வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடுதல் தொடர்பாக, குடும்ப தலைவரின் புகைப்படம் இன்மை, பிறந்த தேதி இன்மை, முகவரியின்மை காரணங்களுக்காக ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் குடும்ப அட்டைகள் அச்சிடப்படாமல் உள்ளது. இதுகுறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே புதிய மின்னணு குடும்ப அட்டை வரப்பெறாத குடும்ப அட்டைதாரர்கள் உடனடியாக தங்கள் நியாய விலைக்கடைக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டுள்ள பட்டியலை பார்வையிட்டு தங்களது குடும்ப அட்டை எண் பட்டியலில் இருப்பின் தேவைப்படும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடை விற்பனையாளரிடம் அளித்து புதிய மின்னணு அட்டை அச்சிட்டு வழங்க ஏதுவாக ஒத்துழைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக