வெள்ளி, 5 மே, 2017

தென்திருப்பேரையில் துணிகரம் நகர பஞ்சாயத்து அலுவலகம்– கோவிலில் திருட்டு

தென்திருப்பேரையில் துணிகரம் நகர பஞ்சாயத்து அலுவலகம்– கோவிலில் திருட்டு

தென்திருப்பேரையில் துணிகரம் நகர பஞ்சாயத்து அலுவலகம்– கோவிலில் திருட்டு
தென்திருப்பேரையில் ஒரே நாள் இரவில் நகர பஞ்சாயத்து அலுவலகம், கோவிலில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்திருப்பேரை, 

தென்திருப்பேரையில் ஒரே நாள் இரவில் நகர பஞ்சாயத்து அலுவலகம், கோவிலில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவிலில் திருட்டு 

தென்திருப்பேரை தெற்கு ரத வீதியில் கோதண்ட ராமசாமி கோவில் உள்ளது. கோவிலில் பூசாரியாக நாராயணன் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் பூஜைகள் முடிந்ததும், வழக்கம்போல் கோவிலை பூட்டிச் சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், கோவில் மூலஸ்தான கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்த, அவர்கள் அம்பாள் கழுத்தில் அணிந்து இருந்த 4 கிராம் தங்க தாலியை திருடிச் சென்றனர்.

கணினி திருட்டு 

அன்றைய தினம் நள்ளிரவில், தென்திருப்பேரை நகர பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மர்மநபர்கள் சென்றுள்ளனர். அலுவலகத்தின் பக்கவாட்டில் உள்ள ஜன்னலின் கம்பிகளை வளைத்து அவர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த கணினியை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

நேற்று காலையில் கோதண்ட ராமசாமி கோவில் மற்றும் நகர பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றில் திருட்டு நடந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். கைரேகை நிபுணர்கள், கோவில் மற்றும் நகர பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில்,‘ இந்த 2 சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்த மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாள் இரவில் நடந்துள்ள இந்த 2 கொள்ளை சம்பவங்கள் தென்திருப்பேரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...