சூறை காற்றுடன் பலத்த மழை 50 ஆயிரம் வாழைகள் சரிந்தன

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 50 ஆயிரம் வாழைகள் சரிந்தன.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் சூறை காற்றுடன், பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் நீடித்த இந்த மழையால், அப்பகுதிகளில் ஏராளமான வாழைகள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில் இசக்கி, வீரபுத்திரன், சுடலை உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான வாழைகள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.
தற்போது பெரும்பாலான வாழை மரங்கள் முழு வளர்ச்சி அடைந்து, அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் சூறை காற்றுடன் பெய்த மழையால் வாழைகள் சரிந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் வாழைகள் சரிந்து விழுந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து...
மேலும் கால்வாய் கிராமத்தில் சூறை காற்றில் சுமார் 30 வீடுகளின் மேற்கூரைகளும் பெயர்ந்து பறந்து விழுந்தன. அங்குள்ள அம்மன் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் மற்றும் ஒரு தோட்டத்தில் நின்ற மின் கம்பம் ஆகியவை சற்று சரிந்ததால், மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சூறை காற்றில் தாதன்குளத்தில் உள்ள கிறிஸ்தவ சபையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதேபோன்று கருங்குளம், வல்லகுளம், புளியகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. எனவே சூறை காற்றில் சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக