ஒரே வீதியில் அனைத்து பொருட்களையும் அள்ளலாம்
`சின்ன கொழும்பு’ ஆக திகழும் ஏரல்
தூத்துக்குடி
மாவட்டம் வியாபார ஸ்தலத்தில் மூன்றாவது பெரிய வணிக நகரமாக விளங்கும் ஏரல் சின்ன கொழும்பு என்ற ழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத் தில் வியாபார ஸ்தலத்தில் ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது. இங்கு பெரியது, சிறியது என 850 கடைகளுக்கு மேல் உள்ளது. இங்கு வியாபா ரம், தொழில் சம்பந்தமாக தினமும் நூற்றுக்கும் மேற் பட்ட கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற னர். இங்குள்ள கடை வீதி எப்பொழுதும் கலகலப் பாக இருக்கும்.
கடை வீதியில் மக்கள் நுழைந்தவுடன் வெயில் அடித்தாலும், மழை பெய் தாலும் அவர்கள் மேல் படாத அளவிற்கு நுழைவு வாயிலில் இருந்து பந்தல் கள் மற்றும் ஆஸ்பெஸ் டாஸ் சீட்டுகள் போடப் பட்டுள்ளது. இங்கு சென் னை பர்மா பஜாரில் இருப் பது போல் குறுகிய தூரத்தில் அனைத்து கடைகளும் உள்ளது. ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் மக்கள் இறங்கி அங்கிருந்து பஜார் பகுதிகளுக்குள் நுழைந்து பொருட்களை வாங்க சென் றால் நடந்தே ஒவ்வொரு கடையாக தேவையான பொருட்களை வாங்கி விட்டு அப்படியே அடுத்த நுழைவு வாயில் வழியாக பஸ் நிலையம் வந்து விடலாம். எந்த ஊரிலும் இந்த வசதி இல்லை.
திருமணம் சீர்வரிசை கொடுப்பதற்கு ஏரலில் அனைத்து பொருட்களும் ஓரே கடைவீதியில் கிடைப் பதால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதிக்கு மக்கள் வந்து சென்றுள்ள னர். அப்போது ஏரல் வெண் கலம் மற்றும் பித்தளை பாத்திரத்திற்கு புகழ் பெற்று இருந்தது. இப்போது ஏரலில் ஜவுளி, நகை, பாத்தி ரம் மற்றும் பலசரக்கு பொருட்கள் குறைவாக கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கார்களில் வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் 75 ஆண்டுகளுக்கு முன்பே ஏரலை ஒரு சின்ன கொழும்பு என மக்கள் அழைத்து வந்தனர்.
இப்பகுதியில் முக்கிய விவசாயமாக நெல், வாழை மற்றும் வெற்றிலை கொடிக் கால்கள் இருந்து வருகிறது. இதனால் இத்தொழிலை நம்பிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடை த்து வருகிறது. ஏரலுக்கு தென் புறம் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறும், வடபகு தியில் வைகுண்டம் வடகால் வாய்க்காலும் இருப்பதால் இப்பகுதியில் தண்ணீர் எப்பொழுதும் செல்வ செழிப்புடன் விவசா யம் நடந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றியதால் வைகுண்டம் வடகால் வாய்க்காலில் இதுவரை கண்டிராத அளவிற்கு தொடர்ச்சியாக 10 மாதங்களுக்கு மேல் ஒரு சொட்டு தண்ணீர் கூட வந்ததில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக