வியாழன், 4 மே, 2017

அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும்’ பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்

அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும்’ பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்

‘அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும்’ பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்
அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்று கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

10 ரூபாய் நாணயங்கள் 

இந்திய ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் அனைத்து செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ரூபாய் நோட்டுகளை விட, நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும். ஆகவே ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.

அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளன.

பல்வேறு வரிசை எண்கள் 

இந்திய ரிசர்வ் வங்கியானது 10 ரூபாய் நாணயங்களை சுவாமி சின்மயானந்தா பிறந்த நாள், டாக்டர் அம்பேத்கார் 125–வது பிறந்த நாள், தேசிய யோகா தினம், மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று இந்தியாவுக்கு திரும்பிய நாள், கயிறு வாரிய வைர விழா, ஸ்ரீ மாதா வைஷ்னோ தேவி கோவில் வெள்ளி விழா, 60–வது பாராளுமன்ற விழா ஆகியவற்றை நினைவூட்டும் விதமாக பல்வேறு புதிய வரிசை எண்கள் கொண்ட 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம் 

எனவே பொதுமக்கள் வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். சில்லரை விற்பனை நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள், மற்றும் சந்தைகள், வணிக நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்களை அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் பொதுமக்கள் தயக்கமின்றி பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...