ஞாயிறு, 30 ஜூலை, 2017

தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதி 10 மாடுகள் பரிதாப சாவு பொதுமக்கள் சாலைமறியல்

தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதி 10 மாடுகள் பரிதாப சாவு பொதுமக்கள் சாலைமறியல்
தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதியதில் 10 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
தென்திருப்பேரை, 
தென்திருப்பேரையில் தண்ணீர் லாரி மோதியதில் 10 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தண்ணீர் லாரிகள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 2¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்ணீர் லாரி மோதியது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா சிவகளை கருங்குளத்தைச் சேர்ந்தவர் நல்லகண்ணு, விவசாயி. இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கடந்த மாதம் நல்லகண்ணு தனது மாடுகளை மேய்ச்சலுக்காக, தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அங்கேயே மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை 8.45 மணி அளவில் நல்லகண்ணு வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று கொண்டிருந்தார். தென்திருப்பேரை கள்ளுக்கடை முக்கு வடிகால் பாலம் பகுதியில் சென்றபோது, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் ஏற்றி செல்வதற்காக வந்த தண்ணீர் லாரி எதிர்பாராதவிதமாக மாடுகளின் மீது மோதியது. பின்னர் அந்த லாரி வடிகால் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
10 மாடுகள் சாவு
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 10 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த மாடுகள் சாலையில் ஆங்காங்கே கிடந்தன. விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தண்ணீர் எடுப்பதற்காக அங்கு வந்த சுமார் 10 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து கடம்பாகுளம் செல்லும் பாதையில் நிறுத்தினர். தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா (ஆழ்வார்திருநகரி), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சப்– இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், பேச்சி, சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது தண்ணீர் லாரிகளை மெதுவாக கட்டுப்பாட்டுடன் இயக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து பகல் 11.30 மணி அளவில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் சுமார் 2¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இறந்த மாடுகளுக்கு இழப்பீடாக லாரியின் உரிமையாளர் சார்பில் ரூ.2 லட்சத்தை நல்லகண்ணுவிடம் வழங்கினர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...