வெள்ளி, 21 ஜூலை, 2017

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தில் விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 366.24 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 366.24 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு
தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தில் விமான நிலையம் அமைந்து உள்ளது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தில் விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வகையில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்காக குமாரகிரி, கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல் மற்றும் சேர்வைக்காரன்மடம் ஆகிய நான்கு கிராமங்களிலும் 600.93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வந்தது. 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நிலஎடுப்பு நடவடிக்கைகளும் 366.24 ஏக்கருக்கு முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலத்தை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க இயக்குனர் சுப்பிரமணியனிடம் நேற்று மதியம் ஒப்படைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) அழகர்சாமி, விமான நிலைய துணை இயக்குனர் கார்த்திகேயன், என்ஜினீயர் கஸ்தூரி, விமான நிலைய மேலாளர் ஜெயராமன், செய்யது மற்றும் நில எடுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...