செய்துங்கநல்லூர், ஜுலை.18:
ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடக்கோரி மதுரை ஐகோர்டில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் மதுரை ஐகோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்பு மிக்க இடம். பாண்டிய நாட்டின் தலைநகரான கொற்கை, ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது. இதனால் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் பணிகள் கடந்த 2004 ல் தெடங்கப்பட்டன. இந்த ஆய்வின் போது ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களை புதைக்கும் இடம் 114 ஏக்கர் பரப்பளவில் இருந்தது கண்டுபிடிக்கப்படடது. இது தவிர ஏராளான பழங்கால பொருள்களும் கண்டெக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூரில் இதுவரை பல கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த அகழாய்வு பணிகள் குறித்து அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இங்கிருந்து கண்டெக்கப்பட்ட பழங்காலப்பொருட்கள் சென்னையிலும் ,வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், அகழாய்வ பணி நிறைவு தொடபான அறிக்கையை வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருகே புளியங்குளத்தில கட்டப்பட்ட தகவல் மையத்தில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப்பொருளட்களை காட்சிப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி. ஆர். சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் இந்த மனு குறித்து மத்திய கலாசாரத்துறை முதன்மை செயலாளர், தொல்லியல் துறை இயக்குனநர் ஜெனரல், தமிழக அரசின் தொல்லியல் துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை வருகிற 7 ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக