தூத்துக்குடி ஜூலை 18 ;தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தற்போது மேலும் 10.08.2017 வரை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிடுதல்; வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்திலுள்ள விளக்கக் கையேட்டில் (Prospectus) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விழையும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திலுள்ள மாதிரி விண்ணப்பம், ரூ.50/-க்கான விண்ணப்ப கட்டணம் செலுத்து சீட்டு மூலம் செலுத்தும் விதம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை இணையதள வசதி உள்ள இடங்களிலிருந்தும் (பிரௌசிங் சென்டர்), அரசு இ-சேவை மையங்களிலிருந்தும் பார்வையிட்டு இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின்படி மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் (Rank List) இதே இணையதளத்தில்; வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கோரம்பள்ளம், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலந்தாய்வில் கலந்து கொள்ளவிருக்கும் பயிற்சியாளர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், அசல் மாற்றுச் சான்றிதழ், எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், அசல் சாதிச் சான்றிதழ், சிறப்புநிலை முன்னுரிமை இருப்பின் அதற்கான அசல் சான்று மற்றும் மேற்காணும் அசல் சான்றுகளின் நகல் 5 எண்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500/- (வருகை நாட்களுக்கு ஏற்ப)
பேருந்து கட்டண சலுகை
விலையில்லா மிதிவண்டி
மடிக்கணனி பாடப்புத்தகங்கள்
வரைபட கருவிகள்
2 செட் சீருடைகள் (தையற் கூலியுடன்)
1 செட் காலணி
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக