தூத்துக்குடி ஜூலை 18 ; அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி- கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்
சிறுத்தொண்டநல்லூர்; கிராமத்திலும்,
திருச்செந்தூர் வட்டத்தில் வெங்கட்டராமானுஜபுரம்; கிராமத்திலும்,
சாத்தான்குளம் வட்டத்தில் நெடுங்குளம்; கிராமத்திலும்,
கோவில்பட்டி வட்டத்தில் இலுப்பையூரணி கிராமத்திலும்,
விளாத்திகுளம் வட்டத்தில்; குளத்தூர் தெற்கு கிராமத்திலும்,
எட்டையபுரம் வட்டத்தில் தலைக்காட்டுபுரம் கிராமத்திலும்,
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கீழமங்கலம்; கிராமத்திலும்,
கயத்தார் வட்டத்தில் தெற்கு மயிலோடை கிராமத்திலும் 21.07.2017 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் தி;ட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்; நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக