ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு: அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு: அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு: அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை
திருச்செந்தூர்,
தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்த போதிலும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. ஸ்ரீவைகுண்டம் அணையின் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டம் அணைக்கு தண்ணீர் வரும் வகையில், அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...