ஏரலில் மழை வேண்டி சர்வ சமய கூட்டுப்பிராத்தனை நடந்தது. மும்மதத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
==================
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் மழை வேண்டி சர்வ சமய கூட்டுப்பிராத்தனை நடந்தது. ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் திடலில் மாலை நடந்தது.
ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், ஏரல் சிவன் கோவில் பட்டர் சங்கரன், ஏரல் பரி.லூக்கா ஆலய சேகர குரு அகஸ்டஸ் பால்பாண்டியன், ஏரல் மாதா தூய ஒத்தாசை மாதா ஆலய பங்குத்தந்தை மரிய அந்தோணி சவரிமுத்து அடிகளார், புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை ஜேசு ஜாண்சன் அடிகளார்,
ஏரல் இமாம் பெரிய மணரா பள்ளிவாசலைச் சேர்ந்த அப்துல் அஜீஸ்,
சூளைவாய்க்கால் இமாம் செய்யது சுலைமான்,
சிறுதொண்டநல்லூர் இமாம் நாகூர் மீரான்
ஆகியோர் இந்த கூட்டுப்பிராத்தனையை நடத்தினர்.
மும்மதத்தினரும் கலந்து கொண்ட இந்த கூட்டுப்பிராத்தனையில் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவுவதை போக்கவும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம், தொழில் வளம் செழிக்கவும் மும்மதத்தினரும் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிப்பட்டனர். இதில் அனைத்து சமுதாயத்தினை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நல்லாசிரியர் வெள்ளையா மற்றும் சமுக ஆர்வலர் ஜெயபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக