தூத்துக்குடி மாவட்டத்தில், ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலை உருவாக்கப்படும், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,

தூய்மை பாரத இயக்கம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் திட்டமிடுதல் மற்றும் அதற்கான குழுக்களை ஏற்படுத்துதல் குறித்த தூய்மை பாரத இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:–
தூத்துக்குடி முதலிடம்
தூய்மை பாரத இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகள் கட்டுவதற்கு அரசு ரூ.12 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2015–ம் ஆண்டு அக்டோபர் 2–ந் தேதிக்குள் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லை என்ற இலக்கின் அடிப்படையில் 146 பஞ்சாயத்துகள் தூய்மை பாரத இயக்கத்தில் தேர்வு செய்யப்பட்டு 43 ஆயிரத்து 61 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
அந்த பஞ்சாயத்துகளில் முழுமையாக திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத பஞ்சாயத்துகளாக மாநில அளவிலான குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு தமிழ்நாட்டிலேயே சுகாதாரத்தில் முதல் மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் அறிவிக்கப்பட்டது.
2016–2017–ம் ஆண்டு 120 பஞ்சாயத்துகளில் 51 ஆயிரத்து 653 கழிப்பறைகள் கட்டப்பட்டு திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற பஞ்சாயத்துகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள்...
நடப்பாண்டில் ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் மாவட்டம் முழுவதும் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 130 பஞ்சாயத்துகளில் அனைத்து வீடுகளிலும் 43 ஆயிரத்து 549 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதி கட்டி முடிக்கப்படும்.
இதற்காக, மாவட்டத்தில் பஞ்சாயத்து, மண்டல, யூனியன், கோட்ட மற்றும் மாவட்ட அளவில் அதற்கான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், தொற்று நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். மாவட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக