வியாழன், 27 ஜூலை, 2017

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது
நாளை வரை நடக்கிறது
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நாளை(சனிக்கிழமை) வரை இத்தேர்வு நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. நாளை(சனிக்கிழமை) வரை இத்தேர்வு நடக்கிறது.
போலீஸ் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வானையம் மூலம் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2–ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 981 ஆண்கள், 1,021 பெண்கள் ஆக மொத்தம் 4 ஆயிரத்து 2 பேருக்கான உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி ஆகியவை தூத்துக்குடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.
உடற்கூறு அளத்தல்
முதல்கட்டமாக நேற்று உயரம், மார்பு அளவு அளக்கப்படுகிறது. அதில் தேர்வானவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப் போட்டி நடந்தது.
தேர்வு மைய தலைவர் சென்னை வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி தலைமையில் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
பெண்களுக்கு...
மேலும் வருகிற 31–ந் தேதி பெண் விண்ணப்பதாரர்களுக்கான உடற்கூறு அளக்கப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வாக 400 மீட்டர் ஓட்ட போட்டி நடத்தப்படுகிறது.
முதல் கட்டதேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற 1–ந் தேதி முதல் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டப் போட்டி ஆகிய உடல்திறன் போட்டிகள் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...