வெள்ளி, 23 ஜூன், 2017

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி, 
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு செண்டை மேளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி, முத்தையாபுரம் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.வினர் திரண்டு வந்து மலர்க்கிரீடம், மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தூத்துக்குடியில் உள்ள அம்பேத்கார், அறிஞர் அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர், குரூஸ்பர்னாந்து உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
யார்–யார்?
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே.பூபதி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி இளையராஜா, இளைஞர் அணி திருநாவுக்கரசு, ராதாபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா, ஒன்றிய துணை செயலாளர் மைக்கேல்ராஜ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் தலைவர் சுகிர்தா சண்முகையா, முன்னாள் கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, நாகராஜ், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகராஜன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, திருச்செந்தூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், ரூபன், சுதாகர்,
தென்திருப்பேரை நகர செயலாளர் ராமஜெயம், இளைஞர் அணி அமைப்பாளர் துரைசிங், 9–வது வார்டு செயலாளர் மகரபூசனம், முன்னாள் துணைத்தலைவர் ஆனந்த், மகளிர் அணி ரேவதி, ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் ராஜசேகர், குரும்பூர் நகர செயலாளர் கே.ராஜன், நாலுமாவடி பஞ்சாயத்து செயலாளர் செந்தில், காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆர்.சுகு, 12–வது வார்டு தி.மு.க. செயலாளர் மாதவன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் காதர், முன்னாள் துணை அமைப்பாளர் கதிரவன், பொன்னையா, முத்து, ஜலீல், கழக பேச்சாளர் மகராஜன், ஆத்தூர் சிற்பி ஸ்ரீதர், மேலஆழ்வார்தோப்பு விவேகானந்தன், வரண்டியவேல் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜனகர், மேலஆத்தூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சதீஷ், ஆத்தூர் கணேசன், வாழவல்லான் பிரபாகரன், நடுவக்குறிச்சி ஸ்ரீமன், குரும்பூர் ரமேஷ், வக்கீல்கள் பாலசுப்பிரமணியன், ஜோதிராஜா, பூங்குமார், சரவணன், ஓட்டப்பிடாரம் ஜெயக்கொடி, பாலசுப்பிரமணியன், செல்வின், முத்துக்குமார், ஆறுமுகமங்கலம் ஆனந்த், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...