
ஸ்ரீவைகுண்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வெங்கடேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வெங்கடேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு ஆஸ்பத்திரி
ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் வெங்கடேஷ் நேற்று காலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.
அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், நர்சுகளிடமும் அவர், கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் வெங்கட ரங்கன் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
தாலுகா– யூனியன் அலுவலகம்
பின்னர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்கு பணியில் இருந்த துணை தாசில்தார் பேச்சிமுத்து உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டு அறிந்தார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்திலும் மாவட்ட ஆய்வு மேற்கொண்டார். அங்கு வந்திருந்த பொதுமக்களிடமும் கலெக்டர் குறைகள் கேட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக