செவ்வாய், 20 ஜூன், 2017

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், தங்கள் பயிர்கடன்களை மத்திய கால கடனாக மாற்றிக் கொள்ளளாம் என்று கலெக்டர் வெங்கடேஷ்

பயிர்கடன்களை, விவசாயிகள் மத்திய கால கடனாக மாற்றலாம் கலெக்டர் வெங்கடேஷ் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், தங்கள் பயிர்கடன்களை மத்திய கால கடனாக மாற்றிக் கொள்ளளாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், தங்கள் பயிர்கடன்களை மத்திய கால கடனாக மாற்றிக் கொள்ளளாம் என்று கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
பயிர் கடன்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வறட்சியால் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களையும் வறட்சியால் பாதித்த பகுதிகளாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் தங்கள் பயிர்கடன்களை திருப்பி செலுத்துவதில் ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்கடன்களை, மத்திய கால கடன்களாக மாற்றியமைக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்றிட தேவையான சான்றிதழ்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய கால கடனாக...
அதன்படி, விவசாயிகள் 1.4.2016 முதல் 31.12.2016 வரை வழங்கப்பட்டு 31.12.2016 அன்று நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை, மத்திய கால கடனாக மாற்றி கொள்ளலாம். எனவே இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் கடன் பெற்றுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வணிக வங்கி கிளைகளை அணுகி பயன்பெறலாம். இந்த சலுகை வருகிற 30–ந்தேதி வரை அமுலில் இருக்கும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...