புதன், 21 ஜூன், 2017

ஸ்ரீவைகுண்டம் அணையில் மீண்டும் அமலைச்செடிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம்
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த வருகிற 9–ந் தேதி புதுடெல்லி புறப்பட்டு செல்வதாக அய்யாகண்ணு கூறினார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று மாலை நிருபர்களிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு   கூறியதாவது:–
விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடினால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.3 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசால் முடிகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை மட்டும் மாநில அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி வஞ்சிக்கிறது.விவசாயிகளின் நலனுக்காக அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்கு செல்லும் நதிகளை, கிழக்கு நோக்கி திருப்பி விட வேண்டும். மாடுகளை காப்பாற்ற நினைக்கும் மத்திய அரசு, விவசாயிகளை காப்பாற்ற மறுக்கிறது. விவசாயி நன்றாக இருந்தால்தான் மாடுகளை நன்றாக வளர்க்க முடியும். விவசாயிகளை தவிர்த்து விட்டு, மாடுகளை மட்டும் பாதுகாக்க முடியாது.
60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த வருகிற 9–ந் தேதி புதுடெல்லிக்கு புறப்பட்டு செல்கிறோம்.
ஸ்ரீவைகுண்டம் அணையில் மீண்டும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. எனவே அவற்றை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...