செவ்வாய், 20 ஜூன், 2017

ஏரல், அருகே, தீவிபத்து 4 தோட்டங்களில் 300 பனை, 150 தென்னை மரங்கள் கருகின

பழையகாயல் அருகே, தீவிபத்து 4 தோட்டங்களில் 300 பனை,
150 தென்னை மரங்கள் கருகின
பழையகாயல் அருகே தோட்டங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 தோட்டங்களில் இருந்த 300 பனை மரங்கள், 150 தென்னை மரங்கள் கருகின.
ஏரல், 
பழையகாயல் அருகே தோட்டங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 தோட்டங்களில் இருந்த 300 பனை மரங்கள், 150 தென்னை மரங்கள் கருகின.
தோட்டங்களில் திடீர் தீ
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலை அடுத்த மஞ்சள்நீர்காயலில் கார்த்தீசன், சங்கரசுப்பு, விஜயமூர்த்தி, வேல்முருகன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்கள் அடுத்தடுத்து உள்ளன. இவர்களது தோட்டங்களில் தென்னை மரங்கள், பனை மரங்கள், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் இருந்தன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தென்னை, பனை மரங்கள் தண்ணீரின்றி வாடிய நிலையில் இருந்தன. அங்குள்ள புற்களும் காய்ந்து இருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தோட்டங்களில் உள்ள காய்ந்த புற்களில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் நாலாபுறமும் தீ வேகமாக பரவியது. இதில் வாடிய நிலையில் நின்ற தென்னை, பனை மரங்களும் தீப்பிடித்து எரிந்தன. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர்.
ரூ.10 லட்சம் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தூத்துக்குடி, ஸ்பிக்நகர், தெர்மல்நகர், பழையகாயல் ஜிர்கோனியம் தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் 4 மணி நேரம் போராடி, இரவு 8 மணி அளவில் தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் சுமார் 300 பனை மரங்கள், 150 தென்னை மரங்கள், ஏராளமான கருவேல மரங்கள் தீயில் எரிந்து கருகி சேதம் அடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் தனலட்சுமி, சதீஷ், சாயர்புரம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சிவசண்முகம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...