ஞாயிறு, 18 ஜூன், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 823 பேர் மீது வழக்கு

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 823 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி, 
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 823 பேர் மீது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதில் தூத்துக்குடி நகரில் 157 பேர் மீதும், 
புறநகரில் 122 பேர் மீதும், 
திருச்செந்தூரில் 111 பேர் மீதும்,
 ஸ்ரீவைகுண்டத்தில் 88 பேர் மீதும், 
மணியாச்சியில் 30 பேர் மீதும், 
கோவில்பட்டியில் 185 பேர் மீதும், 
விளாத்திகுளத்தில் 93 பேர் மீதும், 
சாத்தான்குளத்தில் 37 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...