புதன், 28 ஜூன், 2017

ஏரல் ஜெ.ஜெ.திருமண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை தொடங்குகிறது
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
செயல்வீரர்கள் கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஐ.எம்.ஏ. திருமண மண்டபத்திலும், 2–ந் தேதி காலை 10 மணிக்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் குரும்பூர் டி.ஏ.பி. திருமண மண்டபத்திலும், 8–ந் தேதி காலை 10 மணிக்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய கூட்டம் வல்லநாடு தம்புராட்டி திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய கூட்டம் செய்துங்கநல்லூர் குரு திருமண மண்டபத்திலும், 9–ந் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கூட்டம் ஸ்ரீவைகுண்டம் சுபா திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய கூட்டம் ஏரல் ஜெ.ஜெ.திருமண மண்டபத்திலும்,
15–ந் தேதி
15–ந் தேதி காலை 10 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கூட்டம் புதியம்புத்தூர் செங்குன்ற முதலியார் திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய கூட்டம் பேய்க்குளம் சுபபாலாஜி திருமண மண்டபத்திலும், 16–ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி ஒன்றியம் மற்றும் மாநகராட்சி வார்டு 1, 2, 5, 55, 56, 57, 58, 59 ஆகிய 8 வார்டுகளுக்கான கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், மாலை 5 மணிக்கு காயல்பட்டினம் நகர செயல்வீரர்கள் கூட்டம் ரத்தினாபுரி துளிர்வளாகத்திலும், 23–ந் தேதி காலை 10 மணிக்கு உடன்குடி ஒன்றிய கூட்டம் உடன்குடி ஆர்.எஸ்.யு. திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு சாத்தான்குளம் ஒன்றிய கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்திலும் நடக்கிறது.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்த்தல், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
எனவே செயல்வீரர்கள் கூட்டங்களில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...