தூத்துக்குடி ஜூன் 23 ; தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர்க இருந்த பெரியசாமி மறைந்த பின்னர் தூத்துக்குடியில் திருப்புமுனை ஏற்பட்டதால் எம்.எல்.ஏ கீதா ஜீவன் வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் , அவர் தந்தையார் வகித்த தெற்கு மாவட்ட செயலாளர் பதவியை எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மேலிடம் வழங்கியது. இதனால் வடக்கு மாவட்டம் என்பது தூத்துக்குடி, விளாத்திகுளம்,கோவில்பட்டி போன்ற சட்டமன்ற தொகுதியாகும்,தெற்கு மாவட்டம் என்பது ஓட்டப்பிடாரம்,ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியாகும் ஆனால் ஓட்டப்பிடாரம் தொகுதியானது தூத்துக்குடியில் உள்ள முத்தம்மாள் காலனியில் 4 தெருக்கள்,கே.டீ.சி நகர்,ஹௌசிங் போர்டு,மாப்பிள்ளையூரணி,துவங்கி முள்ளக்காடு முத்தையாபுரம் வரை தூத்துக்குடி கால்வாசி இடங்கள் எம்எல்ஏ அனிதாவுக்கு வருகிறது.
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார் அவருடன் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் ஜோயல் உடன் இருந்தார். அவரை விமான நிலையத்தில் தொண்டர்கள் புடை சூழ வரவேற்றனர். தூத்துக்குடி வீதியெங்கும் 200 க்கும் மேற்பட்ட கார்கள்.பைக் குகள் புடைசூழ அணைத்து தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை போட வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணா சிலையின் முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது...தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதியையும் சகோதரி கீதா ஜீவனுடன் இணைந்து வெற்றி தொகுதியாக மாற்றுவோம். தூத்துக்குடி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்று இந்த நாளில் உறுதி மொழி எடுத்துள்ளோம் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக