
ஆறுமுகநேரியில் 2–வது நாளாக அறிவியல் கண்காட்சி ரெயிலை 23 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரியில் 2–வது நாளாக அறிவியல் கண்காட்சி ரெயிலை 23 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சி ரெயில்
இந்திய ரெயில்வே சார்பில், மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலில் உள்ள 13 குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வானிலை மாற்றத்துக்கான புரிந்துணர்வு, அதனை சீர்படுத்துதல், உலகளாவிய வானிலை மாற்றத்துக்கான புரிதல், உயிர்வள ஆதாரம், இயற்கை பாதுகாப்பிற்கான உயிர் தொழில்நுட்பம், வானிலையை சீர்படுத்துவதற்கான இந்தியாவின் பங்களிப்பு,
அறிவியல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புகள், அறிவியலில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல், குழந்தைகள் பகுதி என பல்வேறு வகையான அறிவியல் தொடர்பான படங்கள், காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
23 ஆயிரம் மாணவர்கள்
அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனை முதல்நாளில் சுமார் 11 ஆயிரம் மாணவ– மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து 2–வது நாளாக நேற்று அறிவியல் கண்காட்சி ரெயிலை 188 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 23 ஆயிரம் மாணவ– மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மாணவர்களின் வசதிக்காக ரெயில் நிலைய வளாகத்தில் 15 இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்பானம், உணவு போன்றவற்றை வழங்கினர். மாலையில் பொதுமக்களும் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிட்டனர்.
இன்றும் (வெள்ளிக்கிழமை) அறிவியல் கண்காட்சி ரெயில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக