சனி, 17 ஜூன், 2017

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் தொகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம்


 
 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நியமனம் 



திருச்செந்தூர், ஜூன் 17 ;
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து திருச்செந்தூரில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி அண்மையில் காலமானார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக கீதாஜீவனும் நியமனம் செய்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டது. திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் தொகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் கோமதிநாயகம், அமலிநகர் ஜெரால்டு, சாமுவேல், வீரபாண்டியன்பட்டணம் ஆக்னல், பாப்புலர் முருகன், மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...