
செய்யது பீடி நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்யது பீடி நிறுவனத்தின் நெல்லை தலைமை அலுவலகம், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழ்கத்தின் 40 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. செய்யது பீடி நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
. இந்த சோதனையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக