வியாழன், 29 ஜூன், 2017

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது.
கலந்தாய்வு
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 480 மாணவ–மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி 2017–18–ம் ஆண்டுக்கான மாணவ–மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த படிப்புகளில் சேருவதற்கு மொத்தம் 737 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை கலந்தாய்வு தொடங்கியது. காலையில் 431–க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. மாலையில் 418 முதல் 430 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வு கல்லூரி முதல்வர் சுப்பாராஜ் தலைமையில் நடந்தது. படிப்புகளின் இருக்கை விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. மாணவ–மாணவிகள் தாங்கள் விரும்பும் படிப்புகளை தேர்வு செய்தனர். அரசு விதிமுறைகளின்படி இனம் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் மாணவிகள் மட்டும் சேர்க்கப்பட்டனர்.
இன்று
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 395 முதல் 417 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 370 முதல் 394 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை 340 முதல் 369 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 340–க்கு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...