தூத்துக்குடி ஜூன் 15 ;மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அடையாளஅட்டை மற்றும் உபகரணங்கள்
வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடைபெறும் நாட்கள் அறிவைக்கப்பட்டுள்ளன.
வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடைபெறும் நாட்கள் அறிவைக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனுடையோரின் தேவைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.;
இந்த ஆண்டில் மேலும் தேவைகளை நிறைவேற்றிட ஒன்றியங்கள்தோறும் மருத்துவ முகாம்கள்
இந்த ஆண்டில் மேலும் தேவைகளை நிறைவேற்றிட ஒன்றியங்கள்தோறும் மருத்துவ முகாம்கள்
17.06.2017 அன்று தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு தூத்துக்குடி, சிவந்தாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியிலும்,
19.06.2017 திங்களன்று கோவில்பட்டி ஒன்றியம் வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
21.06.2017 புதனன்று கருங்குளம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
23.06.2017 வெள்ளியன்று விளாத்திகுளம் ஒன்றியம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும்,
27.06.2017 செவ்வாயன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியலும்,
29.06.2017 வியாழனன்று ஓட்டப்பிடாரம் ஒன்றியம் வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
03.07.2017 திங்களன்று சாத்தான்குளம் ஒன்றியம் கொம்மடிக்கோட்டை சந்தோஷ் நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்
05.07.2017 புதனன்று உடன்குடி ஒன்றியம் கிறிஸ்தியாநகரம் தூ.நா.அ.தி.க ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்
07.07.17 வெள்ளியன்று திருச்செந்தூர் திருசெந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்
10.07.17 திங்களன்று ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்
11.07.2017 செவ்வாயன்று புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்
12.07.2017 புதனன்று கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நடைபெற உள்ளது.
இம்முகாமில் 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, புதிய ஆதார் அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மூன்று சக்கர மிதிவண்டி, காதொலி கருவி, மடக்குக் குச்சி மற்றும் முடநீக்கியல் சாதனங்களான காலிப்பர், ஸ்பிளின்ட், சக்கர நாற்காலி, தள்ளுவண்டி, பிரெய்லி புத்தகம் , இரயில் பயண மற்றும் பேருந்து பாதுகாவலர் பயணச் சலுகை சான்று போன்றவற்றை பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் எலும்பு, மூட்டு சார்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சைகள், செயற்கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, உதட்டுப்பிளவு, அன்னப்பிளவு அறுவைசிகிச்சைகள் மற்றும் உட்காது செவிப்பறை மாற்று அறுவைசிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு மருத்துவ குழுவினரால் பரிந்துரைக்க கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக